மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரனின் முயற்சியால் அம்பாறை தமிழ் பிரதேசங்களில் மேற்கொள்ளப் பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்  கிழக்கு முதலமைச்சரினால் இன்று மக்களுகளிடம்  கையளிக்கும் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளது 
 கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக முதலமைச்சர் நசீர் அஹமட் விவசாய அமைச்சராக இருந்த போது  அவரது ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப் பட்ட வேலைத்திட்டங்களே   இன்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு செய்யப் படவுள்ளன 
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கல்முனை விஸ்ணு ஆலயத்திற்கருகாமையில் முதலமைச்சர் விவசாய அமைச்சராக இருந்த போது  25லட்சருபாவில் நிருமாணிக்கப்பட்ட சிறுவர்பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்கவிருக்கிறார் 
பிற்பகல்  பாண்டிருப்பில் 30லட்சருபா நிதியில் நிருமாணிக்கப்படவுள்ள சிறுவர்பூங்காவிற்கான அடிக்கல்நடும்விழா இடம்பெறவிருக்கிறது. 
பிற்பகல் 4.30மணியளவில் காரைதீவு சக்தி மீன்பிடிச்சங்க தலைமையகத்திறப்புவிழா இடம்பெறவுள்ளது. முதலமைச்சர் மீன்பிடித்துறை அமைச்சராகவிருந்தபோது ஏழரை லட்சருபா நிதியில் நிருமாணித்த தலைமையகக்கட்டடம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது என்றார். 

கருத்துரையிடுக

 
Top