வில்பத்துக் காட்டுப் பகுதியை தான் அழிப்பதாகவும், அங்கே பாகிஸ்தான் மற்றும் ஏனைய மாவட்ட மக்களை கொண்டு வந்து குடியேற்றுவதாகவும் தன் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அப்பட்டமான பொய் என்று அமைச்சர் ரிசாத் தெரிவித்தார்.
காழ்ப்புணர்வு கொண்ட இனவாத தீய சக்திகளின் பின்னணியில் சில ஊடகங்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது குறி வைத்து தாக்குவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


ஊடகங்கள் காட்டும் ஒளி வடிவத்தின் நம்பகத் தன்மை தொடர்பில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 24 ஆண்டுகாலம் காடுகள் மண்டிக் கிடந்த இந்த காணிகள் விடுவிக்கப் பட்ட முறை தொடர்பில் எதையுமே அறிந்துகொள்ளாமல் மனம்போன போக்கில் பிழையான செய்தியினை மக்களுக்கு வழங்கு வதை இவ்வாறான ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அனைத்தையும் இழந்து பலவந்தமாக வெளியேற் றப்பட்டு துன்பத்தில் வாழும், முஸ்லிம்களை மேலும் புண்படுத்துவதைக் கைவிட்டு அவர்களின் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்த அனைத்து சாராரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வட புல முஸ்லிம்கள் மீளக் குடியேற மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தடையாக இருக்காதீர்கள். நாங்கள் அகதி முகாம்களில் பட்ட அவலங்கள் அளப் பரியது. எனவே புதிய ஆட்சியிலாவது எமக்கு விமோசனம் கிடைக்குமென நாம் நம்பியுள்ளோம். தாயக பூமியில் முஸ்லிம்கள் குடியேறுவதற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள் என அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அந்தச் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலையை வெளிக் கொணரும் வகையில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி, பிரதமர் நடவடிக்கை எடுக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.தாயக பூமியில் முஸ்லிம்கள் குடியேறுவதற்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்

கருத்துரையிடுக

 
Top