அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தினக் கூட்டம் கல்முனை மாநகரில் நடை பெற்றது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தமது இணை நிறுவனங்களான வட­கிழக்கு மாகாண ஜீவோதய நலன் புரி நிறுவனம், வட­கிழக்கு மாகாண அரச பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை தொழிற் சங்க சம்மேளனம் என்பவற்றுடன் இணைந்து இந்த மே தினக் கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்தியது.
சங்கத்தினால் 21ஆவது வருடமாக நடத்தப்படும் இந்த மே தினக் கூட்டம் பொது ஊழியர் சங்கத் தலைவரும் தொழிற் சங்க வாதியுமான எஸ். லோகநாதன் தலைமையில் நடை பெற்றது.
மே தின ஊர்வலத்திலும் கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடை பெற்ற இந்த மே தினக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சு+ர் பிரதம அதிதியாகவூம் இகிழக்கு மாகாண சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பேராசிரியர் எம். இராஜேஸ்வரன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
 இந்த மே தினக் கூட்டத்தில் விசேட அம்சமாக அரச சேவையிலிருந்து ஓய்வூபெற்ற சங்க உறுப்பினர்களான மூன்று தொழிலாளர்கள் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
நல்லாட்சியில் தொழிலாளர் உரிமைகள் நலன்கள் பாதுகாக்கப் பட வேண்டும் எனும் முதன்மைத் தொனிப்பொருளில் இடம் பெற்ற இந்த மே தினக் கூட்டத்தில் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் துரிதப்படுத்தி வழங்குமாறு அரசைக் கோரும் தீர்மானம் உட்பட பல தீர்மானங்கள் மே தினத் தீர்மானங்களாக முன் வைக்கப் பட்டன
அம்­பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களுட்பட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி, வவுனியா முல்லைத்தீவு  மன்னார் மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க இணைப்பாளர்கள்  அமைப்பாளர்கள் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

 
Top