தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவ விடுதி எதிர்வரும் 9ஆம் திகதி மாணவர் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது என உயர் கல்வி பிரதி அமைச்சர் சுதர்சனி பெர்ணாண்டோபுள்ளே  தெரிவித்தார்.
 
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது 60 மாணவ விடுதிகளை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதில் 30 விடுதிகளின் நிர்மாணப்பணிகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அண்மையில் பேராதனை மாணவ விடுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
 
மகாபொல புலமைபரிசில் எதிர்வரும் ஜூன் மாதம் தொடக்கம் 5000.00 ரூபாவாக வழங்கப்படும். கர்ப்பிணித் தாய்மாருக்கு 20,000 ரூபாவிற்கான போஷனை பொதி வழங்கப்படுகின்றமையானது எதிர்காலத்தில் சிறந்த பிரஜைகளை உருவாக்க உதவியாக இருக்கும். பிள்ளைகளின் உடல் வளர்ச்சிக்கு பிள்ளைப்பருவத்தில் போஷாக்கான உணவை வழங்க வேண்டும். அதனை கருத்திற்கொண்டே ஜனாதிபதி அத்தகைய வாக்குறுதியை வழங்கினார் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top