(யு.எம்.இஸ்ஹாக்) 
சட்டத்துறையில் 50 வருடத்தை பூர்த்தி செய்த சிரேஷ்ட சட்டத்தரணி எம்.யூ.தாஹா செய்னுதீனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

முன்னாள் மேல் நீதிமன்ற ஆணையாளர் எம்.எஸ்.எம்.ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளம்செழியன், மட்டக்களப்பு மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி வீ.சந்திரமணி, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியும் கம்பன் கழகத் தலைவருமான ஜே.விஸ்வநாதன், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எல்.எம்.மைமுனா, கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பீ.முகைதீன், கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.ஏ.மனாப், களுவாச்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றிழ்வான், வவுனியா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.எம்.றிஸ்வான், கிளிநொச்சி மாவட்ட நீதிபதி எம்.ஐ.எம்.வஹாப்தீன், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.அப்துல்லாஹ், சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கருணாகரன், ஓய்வுபெற்ற நீதிபதிகளான தட்சனாமூர்த்தி, ஏ.எல்.ஏ.கபூர், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம்.எப்.ஏ.அன்சார் மௌலானா, அதன் செயலாளர் சட்டத்தரணி ஏ.எம்.றோசன் அக்தர், உள்ளிட்ட அக்கரைப்பற்று, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, மட்டக்களப்பு பிரதேச சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்கள், கல்முனை பிரதேச சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினரால் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.யூ.தாஹா செய்னுதீன் பற்றிய மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் தங்கப் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டார். 

மேலும் விழாவில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு சிரேஷ்ட சட்டத்தரணி எம்.யூ.தாஹா செய்னுதீன் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
கருத்துரையிடுக

 
Top