நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி  சித்தி விநாயகர் ஆலயத்தில்  இன்று  1985 ஆம் ஆண்டு  கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்தில் இடம் பெற்ற படுகொலை  நினைவு கூரலும்  ஆலய வழிபாடும் கிழக்கு மாகாண  சபை உறுப்பினர் எம்.ராஜேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
 ஆலய வழிபாட்டில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயலாளருமான கே.துரைராஜ சிங்கம் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான  கிருஷ்ண்  பிள்ளை ,கலையரசன் உட்பட  தமிழ் தேசியக் கூட்டமைப்பு  உறுப்பினர்களும் படுகொலை செய்யப் பட்ட குடும்ப அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர் . ஆலயக் குரு  சிவஸ்ரீ மோகானந்தக்  குருக்கள் தலைமையில் வழிபாடுகள் இடம் பெற்றன .

அதனை தொடர்ந்து சுமங்கலி மண்டபத்தில் நினைவு பேருரையும் சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம் பெற்றது கருத்துரையிடுக

 
Top