அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலமானது தனி ஈழத்துக்கு வழிசமைத்துக்கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 
எனவே, தேசிய பாதுகாப்பை கருத்தில்கொண்டே அதை எதிர்த்தேன் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 
தனது இந்த முடிவுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்வதற்குத் தயாராகவே இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த 28ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக ஒரு வாக்கு மாத்திரமே அளிக்கப்பட்டது. சரத் வீரசேகர எம்.பியே எதிராக வாக்களித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

 
Top