அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைப்பார் என அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். 

271 பிரதேச சபைகள், 41 நகர சபைகள், 23 மாநகர சபைகளைக் கொண்ட உள்ளூராட்சி சபையில் பெரும்பாலனவற்றின் ஆட்சிக் காலம் கடந்த ஒக்ரோபர் மாதத்துடன் முடிந்து விட்டது. இவற்றுக்கான தேர்தல் உள்ளூராட்சி சபை சட்டத்தைப் பயன்படுத்தி பிற்போடப்பட்ட நிலையில் வரும் 15 ஆம் திகதி உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் கலைக்கப்பட்டு தொகுதி வாரி தேர்தல் முறை மூலம் தேர்தல் நடக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

களுத்துறையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் ராஜித மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.

கருத்துரையிடுக

 
Top