உள்ளுராட்சி நிர்வனங்களின் பதவிக் காலம் (விடய இல. 30)

இலங்கையில் காணப்படும் 335 உள்ளுராட்சி நிர்வனங்களுள், தற்போது செயற்பாட்டில் உள்ள உள்ளுராட்சி நிறுவனங்கள் 234 இன் பதவிக் காலம் 2015-05-15 ஆம் திகதி முடிவடைகின்றது. மேலும் 65 உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக் காலம் 2015-07-31 ஆம் திகதி முடிவடைகின்றது. மேலும் 21 உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக் காலம் 2015-10-16 ஆம் திகதி முடிவடைகின்றது. 02 உள்ளுராட்சி நிறுவனங்களின் பதவிக் காலம் 2015-10.31 ஆம் திகதி முடிவடைகின்றது. அதன் நிறுவன கோவையின் பிரகாரம் மாநகர சபை நிறுவனக் கோவை, நகர சபை மற்றும் பிரதேச சபை சட்ட  ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றின் பதவிக் காலத்தை மேலும் அதிகரிப்பதற்கு அல்லது குறைப்பதற்கு அதிகாரம் உண்டு. எனினும், எதிர்காலத்தில் தொகுதிவாரி தேர்தல் முறை கலந்த கலப்பு தேர்தல் முறை ஒன்றின் கீழ் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை தெரிவு செய்யும் வாய்ப்பு இருப்பதனால் குறித்த உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தை நீடிக்காது அதன் பதவிக்காலங்கள் முடிவதோடு அவற்றை கலைப்பதற்கு அரசாங்க நிர்வாக, உள்ளுராட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி அமைச்சர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

கருத்துரையிடுக

 
Top