சர்வதேச மேதினம் அனுஷ்டிக்க ஆரம்பிக்கப்பட்டு இற்றைக்கு 129 வருடங்களாகியுள்ள நிலையில் இலங்கையில் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டு 85 வருடங்கள் ஆகியுள்ளன. உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்றைய தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1890ஆம் ஆண்டு அமெரிக்கா- சிலி மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களின் பங்களிப்புடன் முதலாவது சர்வதேச மேதின ஊர்வலம் நடத்தப்பட்டது.

1986ஆம் ஆண்டு மே முதலாம் திகதி சிக்காகோ நகரில் ஆண்டு 8 மணி நேர வேலை நேரம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இறந்தவர்களை நினைவுகூறும் வகையில் 1889 நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் மே முதலாம் திகதி தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு  ஆரம்பிக்கப்பட்ட மே தினம் ஜாதி- மத- இன பேதமின்றி உலகம் முழுவதும் கொண்டாடுவதற்கு கியூபா- சீனா- வட கொரியா உட்பட கம்யூனிச நாடுகள் உரமிட்டன.

1933ஆம் ஆண்டு முதல் தடவையாக இலங்கையில் தொழிற்சங்கத் தலைவர் ஏ.ஈ. குணசிங்க தலைமையில் மேதினம் கொண்டாடப்பட்டது. கட்சி நிறங்களற்ற பொதுவான மேதினமாக முதலாவது மேதினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top