( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )

அரசாங்கத்தின்  நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் நிந்தவூர்ப்  பிரதேசத்திலுள்ள கற்பிணித்தாய்மாருக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு  வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு   நிந்தவூர்  பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளா; பணிமனையில் இடம் பெற்றது.

பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளா; டாக்டா; திருமதி;. பைறூசா நக்பா; தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினா; எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சத்துணவுப் பொதிகளை வழங்கி வைத்தாh;.
மேலும் இந்நிகழ்வில் நிந்தவூh; பிரதேச செயலாளர்  திருமதி.றிபா உம்மா ஜலீல் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளா; ஏ.அலாவூதீன்> பிரதிப் பணிப்பாளா; ஏ.இஸ்ஸதீன் ட்டாளைச்சேனை ஆயூர்வேத ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியேட்சகர் கே.எல்.நக்பர்  அபிவிருத்திக் குழுத் தலைவா; எம்.எம்.றகீம் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா;.

இந்நிகழ்வில்  505 தாய்மாருக்கு ஒரு மாதத்திற்கான சத்துணவாக ரூபாய் 2000 பெறுமதியான சத்துணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இன்னும் 09 மாதங்களுக்கு இவ்வாறான பொதிகள் வழங்கி வைக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளா; தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினா; பைசால் காசீம் இங்கு உரையாற்றுகையில்:- “இந்தநாட்டில் வாழும் கற்பிணித் தாய்மார்கள் போசாக்கின்மையால் படும் கஷ்டங்களையும்> துன்பங்களையும்> அறிந்து கொண்ட இந்த அரசாங்கம் இதனைப் போக்குவதற்காகவே கற்பிணித் தாய்மாருக்கும் > பாலூட்டும் தாய்மாருக்கும் போசாக்கான உணவு  வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாகச் செயற்படுத்தி வருகின்றது” எனத் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

 
Top