(யு.எம்.இஸ்ஹாக் )
கல்முனை நகர்  அருள் மிகு ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர் திரு விழா இன்று (03) வெள்ளிக்கிழமை சிறப்பாக  நடை பெற்றது.
இன்று அதிகாலை  4.30 மணிக்கு  அபிசேகத்துடன் பூசைகள் ஆரம்பமாகி  காலை 6.00 மணிக்கு எம் பெருமான் தேர் பவனி ஆரம்பமானது .
கௌரி அம்பாள் சமேத சந்தான  ஈஸ்வரப் பெருமான்  ஒரு தேரிலும் விநாயகப் பெருமான் ஒரு தேரிலும்  வள்ளி தெய்வானை  சமேத முருகப் பெருமான்  ஒரு தேரிலுமாக  மூன்று தேர்களில்  இறைவன் பவனி வருகின்ற  திரு நிகழ்வு அனைத்து  பக்த அடியார்களின் உள்ளங்களையும்  பரவசப் படுத்தியது .
பிரம்ம ஸ்ரீ  சுந்தர செந்தில் ராஜ குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம் பெற்றதுடன்  காவடிகள்,கரகாட்டம்,பால்குட பவனியுடன்  நாதஸ்வர  தவில் முழக்கம் ,பறை மேள  முழக்கத்துடன்  இத்தேர் திரு விழா  கல்முனை பிரதான வீதி வழியாக  இடம்  பெற்று  ஆலயத்தை சென்றடைந்தது
கருத்துரையிடுக

 
Top