அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபராகப் பொறுப்பேற்றுள்ள திரு. துசித பீ வணிகசிங்க, நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை அவரது அமைச்சு அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (24) சந்தித்தார்.
இதன்போது புதிய அரசாங்க அதிபருக்கு அமைச்சர் ஹக்கீம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சுகாதார இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை, கிராமிய மின்சாரம் மற்றும் சமுக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கல்முனை மாநகர மேயர் நிசாம் காரியப்பர் ஆகியோரும் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

 
Top