(ஹாசிப் யாஸீன்)

அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவு  வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் சாய்ந்தமருதில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  டாக்டா; ஏ.எல்.எம்.பாறூக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்  ஏ.எல்.ஏ.மஜீத் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தாய்மார்களும் கலந்து கொண்டனர் .

இதன்போது கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷாக்கு உணவு ப் பொதிகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

சிறுவர்  மற்றும் மகளிர்  விவகார ராஜாங்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தில் கர்ப்பம் தரித்து 4 மாதம் தொடக்கம் பிள்ளை கிடைத்து 4 மாதம் வரை உள்ள தாய்மார்களுக்கு மாதாந்தம் ரூபா. 2 ஆயிரம் படி 10 மாதத்திற்கு ரூபா. 20 ஆயிரம் பெறுமதியான போஷாக்கு உணவு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் 460 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நன்மையடையவுள்ளனர் .


கருத்துரையிடுக

 
Top