பெண் கல்விக்காகப் போராடி, தாலிபன்களின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் பிழைத்த, நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் பெயர் விண்கல் ஒன்றிற்கு சூட்டப்பட்டுள்ளது. 
பாகிஸ்தானைச் சேர்ந்த பாடசாலை மாணவியான மலாலா பெண் கல்விக்காக குரல் கொடுத்தமையினால் கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தலீபான் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகினார். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிய மலாலா, சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பூரண குணம் அடைந்த மலாலா, தற்போது அங்குள்ள பாடசாலையில் கல்வி பயில்கின்றார்.

கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை மலாலா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top