2012 இல் க .பொ .த சா/த  பரீட்சைக்கு தோற்றி  க .பொ .த உ /த கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தால் வழங்கப் படும் முதலாம் கட்ட கொடுப்பனவு புலமைப் பரிசில்  இன்று கல்முனை வலயக் கல்வி அலுவலகதுக்குட் பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப் பட்டது .

வலயக் கல்வி அலுவலக கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் தலைமையில்  கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகவும், பிரதிக் கவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் கௌரவ அதிதியாகவும்  கல்முனை வலய  அதிபர்கள் சங்க தலைவரும் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் வ.பிரபாகரன்  உட்பட அதிபர்கள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான புலமை பரிசில் நிதியை வழங்கி வைத்தனர் .
இதன் போது  100 மாணவர்களுக்கு இக்கொடுப்பனவு வழங்கப் பட்டது.இதே வேளை  கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி  வலயங்களிலும் இருந்து தெரிவூ செய்யப்பட்ட  1622 மாணவர்களுக்கு 97 இலட்சத்து 32ஆயிரம் ரூபா நிதி மாணவர்களுக்கு வழங்கப் படவூள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

 
Top