( ஏ.எல்.ஏ.றபீக் பிர் தௌஸ் )
அரசாங்கத்தின்  நூறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள கற்பிணித் தாய்மாருக்கும் பாலூட்டும் தாய்மாருக்கும் சத்துணவு  வழங்கும்   முதல்  கட்டம சம்மாந்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர்  பணிமனையில் இடம் பெற்றது.
பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர்  டாக்டர்  எம்.எம்.எம்.சபீர்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்  எம்.ஐ.எம்.மன்சூர்  பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சத்துணவுப் பொதிகளை வழங்கி வைத்தார் 
மேலும் இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்  கே.எல்.ஹம்சார்  உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர் 
இந்நிகழ்வில் மொத்தம் 1043 தாய்மாருக்கு ஒரு மாதத்திற்கான சத்துணவாக ரூபாய் 2000 பெறுமதியான சத்துணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. இன்னும் 09 மாதங்களுக்கு இவ்வாறான பொதிகள் வழங்கி வைக்கப்படுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர்  தெரிவித்தார் 

கருத்துரையிடுக

 
Top