'சூழ்ச்சியில் சிக்கியது செரண்டிப்' என்ற தலைப்பில் 'செரண்டிப்' பத்திரிகை தொடர்பாக  முக நூலில் வெளியாகியுள்ள செய்தி .................

முஸ்லிம்களுக்கொன தனியான தேசிய நாளிதழ் இல்லாததால் அந்தக்குறையை நிவர்த்திக்க என கூறிக் கொண்டு பத்திரிகை ஒன்றை உருவாக்க முன்வந்தார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது அரசியல் நோக்கத்துக்காக அல்லாது சமூகத்துக்காகவே இந்தப்பத்திரிகையை தொடங்குகின்றேன் என அப்பத்திரிகைக்காக நியமிக்கப்பட்ட பிரதம ஆசிரியரான எம். ஐ. முபாரக்கிடயம் தெரிவித்திருந்தார்.
மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் கூட முஸ்லிம் சமூகத்துக்கு செய்யத்தவறிய இந்தப்பணியை செய்யப்போவதாக கூறி நம்பவைத்தார்.
இதனைத்தொடர்ந்து பத்திரிகையும் தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில் அப்பத்திரிகையின் ஆசிரியருக்கே அறிவிக்காமல் நவமணி பத்திரிகையுடன் அதனை இணைத்தார்.
முஸ்லிம்களுக்கான தனித்துவப்பத்திரிகை என்ற போர்வையை அணிந்து கொண்டு – அதனூடாக தொடர்ச்சியாக நிதிமோசடிகளில் ஈடுபட்டுவரும் நவமணிப்பத்திரிகையின் நிர்வாகம் செய்த சூழ்ச்சியில் சிக்கிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது அரசியல் தேவையை முழுமையாக நிறைவேற்றும் நேக்கில் செரண்டிப்பத்திரிகையை நவமணியுடன் இணைத்து செரண்டிப்பின் பிரதம ஆசிரியர், செய்தி ஆசிரியார் மற்றும் இரண்டு ஊடகவியலாளர்கள் ஆகியோரை நடுத்தெருவுக்கு கொண்டுவந்துள்ளார்.
செரண்டிப் இணைக்கப்பட்டுள்ள இந்த நவமணிப்பத்திரிகை சமூகம் என்ற போர்வை அணிந்துள்ள ரிஷாட் பதியுதீனுக்கான அரசியல் பத்திரிகை என்பதையும் அது முஸ்லிம்களுக்கான பத்திரிகை இல்லை என்பதையும் நாம் அடுத்தடுத்தாக ஆதாரங்களுடன் வாசகர்களுக்கு முன்வைப்போம்.
செரண்டிப்பத்திரகையில் அமைச்சரால் நியமிக்கப்பட்டிருந்த பினாமியால் செய்யப்பட்ட பாலியல் சேட்டைகள், மோசடிகள் அடுத்தடுத்து விரைவில் வெளிக்கொண்டுவரப்படும்.

கருத்துரையிடுக

 
Top