சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு பாண்டிருப்பு விஷ்ணு இளைஞா் கழகம் நடாத்தும் விளையாட்டு போட்டி நிகழ்சியின் முதல் நாளாகிய இன்று காலை சைக்கிள் ஓட்டப்போட்டி சிறப்பாக ஆரம்பமாகியது.
பாண்டிருப்பு அரசடியம்மன் ஆலயம் முன்பாக ஆரம்பித்து பிரதான வீதியூடாக அம்பாரை சென்று பின்னா் அக்கரைப்பற்றை சென்றடைந்து மீண்டும் ஆரம்பித்த இடத்தை துவிச்சக்கர வண்டி ஓட்ட வீரா்கள் வந்தடைந்தனர் .
இவ்வைபவத்தில்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினா் பேராசிரியர் மு. இராஜேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து   போட்டியை ஆரம்பித்து வைத்தாா்.

கருத்துரையிடுக

 
Top