ஏ.எல்.எம்.சலீம் 

சித்திரைப் புத்தாண்டு கொடுக்கல் வாங்கல்  மற்றும்  புத்தாண்டு பரிசு வழங்கும் நிகழ்வு நிந்தவூர் இலங்கை வங்கி கிளையில் சிறப்பாக இன்று நடை பெற்றது . வங்கியின் வாடிக்கையாளர் சேவை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தலைமையில் நடை பெற்ற  இந்த நிகழ்வில்  வங்கி முகாமையாளர்  ஆர்.தவராசா  பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .

வங்கி உதவி முகாமையாளர் எம்.வை.அப்துல் நசீரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் வங்கி வாடிக்கையாளர்கள் , ஓய்வு நிலை வங்கி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர் . இந்நிகழ்வின் போது  புது வருட வைப்புகளை செய்த  வாடிக்கையாளர்களுக்கு  பரிசுகள் வழங்கப் பட்டன .
வங்கி முகாமையாளர் ஆர்.தவராசா  நிகழ்வில்  உரையாற்றுகையில்  இலங்கை வங்கி ஆரம்பிக்கப் பட்டு 75 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வழமை போல் இம்முறையும் சித்திரைப் புத்தாண்டை வாடிக்கயாளர்களுடன்  வங்கி கொண்டாடுகின்றது . இலாபமீட்டும் நோக்கம் மட்டுமன்றி சமுக நலன் நோக்கையும் கொண்டு இயங்கும் இலங்கை வங்கி  யாழ் புகையிரத நிலையம் ,மிஹின் லங்கா  போன்ற  பலவற்றிற்கு  சமுக நலனோம்பு திட்டத்தின் கீழ் நிதி உதவிகளை அளித்துள்ளது .கடந்த வருடம்  இலங்கையின் நிதி துறை வரலாற்றில்  ஆகக் கூடிய நிகர லாபமாக  20.8 பில்லியன் ரூபாய்களை இலங்கை வங்கி பதிவு செய்துள்ளது.
இவற்றுக்கெல்லாம் எமது வாடிக்கயாளர்களே   முக்கிய காரணமாகும் . எதிர் காலத்தில் எமது வாடிக்கயாலர்குக்கான சேவைகள்  சிறப்புற திகழும்  என்றார்.


கருத்துரையிடுக

 
Top