(பாத்திமா ஹம்தா ஸீனத்)
மருதமுனைகல்வி,கலை, இலக்கிய,சமூகஅபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மருதமுனையைச் சேர்ந்த பல் துறைக் கலைஞரும்,கல்வியா ? காதலா ?திரைப்பட இயக்குனரும் கவிஞர் அல்லாமா இக்பால் கலைக் கழகத்தின்  ஸ்தாபகருமான ஏ.எல்.ஐ.ஹூசைன் (ஜீனாராஜ்) அவர்கள் கலை.இலக்கியத் துறைக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டிநேற்று  (12-04-2015)கௌரவிக்கப்பட்டார்.
மன்றத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான பி.எம்.எம்.ஏ.காதர் தலைமையில் இந்தநிகழ்வு  இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக மன்றத்தின் ஆலோசகரும் கல்முனை பிரதேச திவிநெகும அதிகாரியுமான ஏ.ஆர்.எம்.சாலிஹ் கலந்துகொண்டார். விஷேட அதிதியாக கல்வியா ? காதலா ? திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எல்.எம்.நழீம்(பாஹீம் ஜூவலரி) கலந்துகொண்டார்.
அதிதிகளாக மன்றத்தின் செயலாளரும் ஊடகவியலாளரும்,அறிவிப்பாளருமான ஏ.எல்.எம்.சினாஸ். மன்றத்தின் உறுப்பினரும் ,நாடகக் கலைஞருமான ஏ..எல்.சபுறுத்தீன்(நெய்னாமுகம்மட்) ஆகியோருடன் பலர் கலந்துகொண்டனர்.இந்தநிகழ்வில் பல்துறைக் கலைஞர் ஏ.எல்.ஐ.ஹூசைன் (ஜீனாராஜ்)அவர்களுக்கு திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ்,திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எல்.எம்.நழீம்(பாஹீம் ஜூவலரி)ஆகியோர் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.


கருத்துரையிடுக

 
Top