லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இன்று பாராளுமன்றத்திற்கு வரவழைக்கப்பட்ட நிலையில் அவர் தெரிவித்த விடயங்கள் தொடர்பில் நாளை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் அறிக்கை சமர்ப்பிப்பார் என பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் கையொப்பமிட்டு, பாராளுமன்றத்திற்கு இன்று கடிதமொன்றை கையளித்தனர். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே கடிதம் சமர்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையிலேயே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை பாராளுமன்றிற்கு வருமாறு சபாநாயகர் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

 
Top