நாளை கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்  செய்து வைத்திய சாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வெளி நோயாளர் பிரிவை திறந்து வைக்கவுள்ளார்.
100 வருடம் பழமை வாய்ந்த இவ்வைத்திய சாலையில் இருந்த பழமை வாய்ந்த  வெளி நோயாளர்  பிரிவு கட்டிடம்  உடைத்து திருத்தம்  செய்யப் பட்டு நவீனமாக அமைக்கப் பட்டுள்ளது.
வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடை பெறவுள்ள இவ்வைபவத்தில் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதுடன் சுகாதார ராஜாங்க அமைச்சர் ஹசனலி உட்பட அமைச்சு அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவிருப்பதாக  வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  ஆர்.முரளீஸ்வரன்  தெரிவித்தார் .
இந்த வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பிரதம அதிதியாக கலந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப் பட்ட போதும் ஜனாதிபதியின் வருகை தவிர்க்கப் பட்டிருப்பதாகவும் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  ஆர்.முரளீஸ்வரன்  தெரிவித்தார் .

கருத்துரையிடுக

 
Top