கல்முனைப் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 லட்சத்து 56 ஆயிரம் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரெட் வகைகள் புலனாய்வு பிரிவின் உதவியுடன் கல்முனை பொலிஸாரால் இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. 
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பாரின் வழிகாட்டலில் போதைப் பொருள் பொறுப்பதிகாரி கே.கே.வீ.சஞ்சீவ தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதலில் குறித்த சிகரெட் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். இவர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

கருத்துரையிடுக

 
Top