ஹக்கீமின் இணைப்பாளர்  தௌபீக்அதிரடி நடவடிக்கை 
(யு.எம்.இஸ்ஹாக் )


நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகால் அமைச்சின் பணிப்புரைக்கமைய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நற்பிட்டிமுனை அஸ்ரப் மைதானம், சேனைக்குடியிருப்பு கிட்டங்கிப் பாலம் ஆகியன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
 குறித்த இரு இடங்களையும் நகர அபிவிருத்தி அதிகாரிகளான நகர திட்ட முகாமைத்துவப் பணிப்பாளர் பிரிகேடியர் மகிந்த, கிழக்கு மாகாண நீர் வழங்கல் பிரதம பணிப்பாளர் ஜஃபர், அம்பாரை நீர்ப்பசன பணிப்பாளர் நிகால் சிறிவர்த்தன,  ஆகியோர் இன்று (2015.04.09)நேரில் சென்று குறித்த இடங்களைப் பார்வையிட்டனர் .

இவை தொடர்பான பூரண விளக்கத்தினை நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகால் அமைச்சர்  றஊப் ஹக்கீமின் இணைப்பாளர்  UL. தௌபீக் ஆவணப் படங்களுடன் அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார் . 


கருத்துரையிடுக

 
Top