மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள தாழங்குடாவில்   இன்று  மாலை வான் ஒன்று குடை சாய்ந்ததில் நான்கு பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த வான் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள தாழங்குடாவில் வைத்து வீதியை விட்டு விலகி குடை சாய்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் உள்ள மின் கம்பம் ஒன்றுடன் இந்த வான் மோதியுள்ளது.
இதில் பயணித்த மூன்று பேர் மற்றும் வான் சாரதி அடங்கலாக நான்கு பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வானின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளது.
காயமடைந்தவர்கள் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இந்தச் சம்பவம் பற்றி விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

 
Top