யு.எம்.இஸ்ஹாக் -கல்முனை 
நிந்தவூர்  கலாச்சாரப் பேரவையினால் இன்று நடாத்தப் பட்ட பிரதேச கலாச்சார விழாவில்  நிந்தவூர் மண்ணுக்கு பெருமை சேர்த்த 60இற்கு மேற்பட்டோர்  பாராட்டி கௌரவிக்கப்பட்டனர் . இதில் சிரேஸ்ட ஊடகவியலாளர்களான  இலங்கை தேசிய தொலைக் காட்சி சேவையின் தமிழ் பிரிவு செய்திப் பணிப்பாளர் உமறுலெப்பை யாக்கூப், கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் ஆகிய  இருவரும்  ஊடகவியலாளர்களாக பாராட்டி கௌரவிக்கப் பட்டனர் .

நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியானி றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடை பெற்ற கலாச்சார விழாவில் ராஜாங்க சுகாதார அமைச்சர் எம்.ரீ.ஹசனலி,பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன்  ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு  ஊடகவியலாளர்களை பாராட்டி கௌரவித்தனர் . 
கருத்துரையிடுக

 
Top