அம்பாறை மாவட்டத்தின் சகல ஆலயங்களிலும் சுப வேளை 12.20 மணிக்கு மன்மத புத்தாண்டு வழிபாடுகள் மிகவும் அமைதியாக இடம் பெற்றன.
கல்முனை பிரதேசத்தில் பிரதான நிகழ்வு  நற்பிட்டிமுனை அம்பலத்தடி ஸ்ரீ சித்தி வினாயகர் ஆலயத்தில் இடம் பெற்றது.

ஆலய குரு சிவஸ்ரீ மோகானந்தக் குருக்கள் தலைமையில் புத்தாண்டு வழிபாடுகள் இடம் பெற்றன. ஆலய வழிபாட்டில் கலந்து கொண்ட தழிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி எம்.இராஜேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்  நாட்டில் நல்லாட்சி நிலவுகின்ற இவ்வேளையில் தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து  நல்லாட்சி நீடித்து நிலைக்க இப்புத்தாண்டில் பிரார்த்திப்பதாக தெரிவித்தார் .ஆலயத் தலைவர் பொபி,பொருளாளர் கனகராஜா உட்பட மக்கள் பலரும் கலந்து கொண்டனர் 
கருத்துரையிடுக

 
Top