கல்முனை பொலிஸ் சவால் கிண்ணத்தை சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் சுவீகரித்தது.
கல்முனை பொலிஸ் நிலையம் சாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் அனுசரணையில் இளைஞர்களுக்கு போதைப் பொருளற்ற சமுதாயம் தொடர்பில் விழிப்புட்டும் வகையில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு. ஏ.கப்பாரின் வழிகாட்டுதலில் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (26) நடைபெற்ற இறுதிப் போட்டியில் கல்முனை டொல் பின் விளையாட்டுக் கழகத்தை சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் 51 ஓட்டங்களினால் வெற்றிபெற்று 2015 ஆம் ஆண்டுக்கான பொலிஸ் கிண்ண த்தை சுவீகரித்துக் கொண்டது.
கல்முனை பொலிஸ் எல்லைக்குட்டபட்ட 13 கழகங்கள் பங்கு கொண்ட மேற்படி 8 ஓவர்கள் கொண்ட மட்டுப் படுத்தப்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டி கடந்த வெள்ளிக் கிழமை (24) கிழக்கு பிராந்திய பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைத்தார். இறுதிப் போட்டி 10 ஓவர்கள் கொண்டதாக அமைந்தது.
இறுதிப் போட்டிக்கு அம்பாறை தற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.என்.வாகிஸ்ட பிர தம அதிதியாகவும், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது அஸ்லம் பிக்மார்ட் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.அஸ்லம் றியாஜ் , கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத் திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர், கல்முனை ஆதாதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளிஸ்வரன், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக்கோன், அம்பாறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கெலும் திலகரெட்ன, அக்கரைப் பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த ஆகி யோர் கௌரவ அதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்த மருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை டொல் பின் விளையாட்டுக்கழகம் 10 ஓவர்கள் முடிவில் 6 விக்கட் டுக்களை இழந்து 74 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இப்போட்டிக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக உடற் கல்வித்துறை போதனாசிரியர் ஐ.எம்.கடாபி மற்றும் முஹம்மது nஜஸ்மின் ஆகியோர் நடுவர்களாக கடமை புரிந்தனர்.
சம்பியன்களாக தெரிவுசெய்யப்பட்ட சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் அணிக்கு 15 ஆயிரம் ரூபா பணப்பரிசும் சம்பியன்கிண்ணமும், இரண்டாம் இடத்தைப் பெற்ற கல் முனை டொல்பின் அணிக்கு 10 ஆயிரம் ரூபா பணப் பரி சும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டன.

கருத்துரையிடுக

 
Top