கல்முனை பிரதேச செயலக திவிநெகும சமதாய அடிப்படை வங்கிகளில் 2014ம் ஆண்டு புத்தாண்டு கொடுக்கல் வாங்களில் பிரிவு மட்டத்தில் சேமிப்பை மேம்படுத்திய திவிநெகும் உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்  வழங்கிய நிகழ்வு  நேற்று (09) பிரதேச செயலகத்தில் நடைபெற்றது . 

திவி நெகும முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.பரீரா  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.மங்கள விக்ரம ஆராச்சி, திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஆகியோரால்  ,திவிநெகு முகாமையாளர்களான எம்.எம்.எம்.முபீன்,எம.;சதீஸ் ஆகியோருக்கும் வளைய முகாமயாலர்களான எஸ்.எல்.ஏ.அஸீஸ் ,ஏ.எம்.நாசீர்  ஆகியோருக்கும்   திவிநெகம உத்தியோகத்தர்களான எம்.எம்.ஏ.மஜீத் ,எஸ்.எம்.லாபீர், எம்.ரி.அமினுதீன், எஸ்.எம்.சத்தார், உட்பட  பலருக்கு சான்றிதழ் வழங்கப்  பட்டதுடன்  சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பேறு  பெற்ற திவிநெகும  உதவி பெறும்  குடும்பங்களை சேர்ந்த மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப் பட்டனர்.

திவிநெகும்  சமூக  அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்  என்.எம்.நௌசாத் நிகழ்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கினார் . சிறந்த வங்கிக்கான விருது கல்முனை குடி திவிநெகும  வங்கிக்கு வழங்கப் பட்டதுடன்  திவிநேகும அதிகாரிகளும் கலந்து கொண்டனர் 
கருத்துரையிடுக

 
Top