அகில இலங்கை அர­சாங்க பொது ஊழியர் சங்­கத்தின் மே தினக் கூட்டம் எதிர்­வரும் முதலாம் திகதி வெள்­ளிக்­கி­ழமை கல்­முனை மாந­கரில் நடை­பெ­ற­வுள்­ளது.
அகில இலங்கை அர­சாங்க பொது ஊழியர் சங்கம் தமது இணை நிறு­வ­னங்­க­ளான வட­கி­ழக்கு மாகாண ஜீவோ­தய நலன்­புரி நிறு­வனம், வட­கி­ழக்கு மாகாண அரச பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜன­நா­ய­கக்­கட்சி, ஸ்ரீலங்கா அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை தொழிற்­சங்க சம்­மே­ளனம் என்­ப­வற்­றுடன் இணைந்து இந்த மே தினக் கூட்­டத்தை வெகு சிறப்­பாக நடத்­த­வி­ருக்­கின்­றது.
சங்­கத்தினால் 21ஆவது வரு­ட­மாக நடத்­தப்­படும் இந்த மே தினக் கூட்டம் பொது ஊழியர் சங்­கத்­த­லை­வரும் தொழிற்­சங்­க­வா­தி­யு­மான எஸ். லோக­நாதன் தலை­மையில் நடை­பெறும்.
கல்­முனை வை.எம்.சீ.ஏ. மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வி­ருக்கும் இந்த மே தினக் கூட்­டத்தில் கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் பிர­தம அதி­தி­யா­கவும் கிழக்கு மாகாண சபையின் தமி­ழ­ரசுக் கட்சி உறுப்­பினர் பேரா­சி­ரியர் எம். இரா­ஜேஸ்­வரன் கெள­ரவ அதி­தி­யா­கவும் கலந்து கொள்வர்.
அத்­துடன் பிர­பல இலக்­கியப் புர­வ­லரும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யு­மான சட்­டத்­த­ரணி ஏ.எம். பது­றுதீன், சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் கலா­பூ­ஷணம் ஏ.எல்.எம். சலீம் ஆகியோர் சிறப்பு அதி­தி­க­ளா­கவும் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.
மேலும் இந்த மே தினக் கூட்­டத்தில் விசேட அம்­ச­மாக அரச சேவை­யி­லி­ருந்து ஓய்வுபெற்ற சங்க உறுப்­பி­னர்­க­ளான எஸ். கேதீஸ்­வரன், யூ.எல்.எம்.அலியார், கே. விக்­னேஸ்­வரன் ஆகிய மூன்று தொழி­லா­ளர்­களைப் பாராட்டி கெள­ர­விக்கும் நிகழ்வும் இடம்­பெ­ற­வுள்­ளது.
நல்­லாட்­சியில் தொழி­லாளர் உரி­மைகள் நலன்கள் பாது­காக்­கப்­பட வேண்டும் எனும் முதன்மைத் தொனிப்­பொ­ருளில் இடம்­பெ­ற­வி­ருக்கும் இந்த மே தினக் கூட்­டத்தில் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்வைத் துரி­தப்­ப­டுத்தி வழங்­கு­மாறு அரசைக் கோரும் தீர்­மானம் உட்­பட பல தீர்­மா­னங்கள் மே தினத் தீர்­மா­னங்­க­ளாக முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன.
இதே­வேளை அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு, திரு­மலை மாவட்­டங்­க­ளுட்­பட வட­மா­கா­ணத்தின் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, முல்­லைத்­தீவு, மன்னார் மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் வருகை தரும் அகில இலங்கை அர­சாங்க பொது ஊழியர் சங்க இணைப்­பா­ளர்கள் , அமைப்­பா­ளர்கள், முக்­கிய உறுப்­பி­னர்கள் மே தினக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­வி­ருப்­ப­தாக சங்க பொதுச் செய­லாளர் எம்.எம்.ஏ. வகாப் தெரி­வித்தார்.
இதே­வேளை இந்த மே தினக் கூட்­டத்தின் இறு­தியில் அகில இலங்கை அர­சாங்க பொது ஊழியர் சங்கத்தின் 21 ஆவது வருடாந்தப்பொதுக் கூட்டமும் சங்க இணை நிறுவனமான வடகிழக்கு மாகாண ஜீவோதய நலன் புரி நிறுவனத்தின் 18ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளதாக பொதுச் செயலாளர் வகாப் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

 
Top