கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்ற பெயரில் இயங்கி வந்த ஊடகவியலாளர் அமைப்பு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனம் என மறு சீரமைக்கப்பட்டு அதன் பொதுச் சபைக் கூட்டம் நடைபெற்ற போதே இதற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.

மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் தலைவராக தேவ அதிரன் செயலாளராக ரி.எல்.ஜௌபர்கான் பொருளாளராக சிவம் பாக்கியநாதன் உப தலைவர்களாக எம்.சகாப்தீன் எம்.எஸ்.எம்.நூர்தீன் உப செயலாளர்களான எஸ்.பேரின்பராசா எஸ்.வரதராஜன் ஊடக இணைப்பாளர்களாக எஸ்.எச்.எம்.சர்மிளா எஸ்.நிலாந்தன் உட்பட வி.கே.ரவீந்திரன் கே.பி.கேதீஸ் யு.எல்.எம்.றியாஸ் யு.உதய காந்த அருள் சஞ்சித் எம்.ஏ.சி.எம்.ஜெலீஸ் எப்.பர்ஹான் ஏ.எல். ஆகிய நிருவாக குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்

கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கியதாக செயற்படவுள்ள இந்த அமைப்பில் மட்டக்களப்பு மற்றும் அம்பாரை திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஊடகவியலாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட வுள்ளனர்

கருத்துரையிடுக

 
Top