ஏ.பி.எம்.அஸ்ஹர்,யு.எம்.இஸ்ஹாக் 

கிழக்கு மாகாணத்தின் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் புதிய மாகாணப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள  டாக்டர்  எம்.ஏ.எம்.பாஸியை கௌரவிக்கும் நிகழ்வொன்று இன்று சாய்ந்தமருதில் நடை பெற்றது.

கல்முனை கால்நடை உற்பத்தி சுகாதாரத அலுவலகத்தின் பொறுப்பதிகாரி டாக்டர்  ஏ.எம்.ஐிப்ரி தலைமையில்  சீ பிரீஸில் நடை பெற்ற இந்நிகழ்லில் மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் டாக்டர். எம்.சி.ஜுனைட்  அம்பாரை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் டாக்டர் .எம்.எம்.நதீர் உட்பட கால்நடை வைத்தியர்கள் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கால்நடை வைத்திய அலுவலக ஊழியர்களும்  இதில் கலந்து கொண்டனர்.

புதிய மாகாணப்பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் எம்.ஏ.எம்.பாஸி ஊழியர்களால் பொன்னாடைடை போர்த்தி கௌரவிக்க்ப்பட்டதுடன் அதிதிகளுக்கு நினைவுப் பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின்  கடந்த கால செயற்தி்ட்டங்களின் முன்னேற்றங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டதுடன் எதிர் காலத்தில் மேற் கொள்ளப்பட்வுள்ள செயற்தி்ட்டங்கள் பற்றியு்ம அலுவலர்களின் சேம நலன்கள் மற்றும் அதனுடன் தொடர்பு பட்ட விடயங்கள் பற்றியும் விரிவாக இங்கு ஆராயப்பட்டது.


கருத்துரையிடுக

 
Top