(பி.எம்.எம்.ஏ.காதர்)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் தொழுநோயைகட்டுப்படுத்துவதுதொடர்பாகஊடகவியலாளர்களுக்குவிளக்கம ளிக்கும் ஊடகமாநாடு இன்று (30-04-2015) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் தாய் சேய் நலவைத்தியஅதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால்,பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன்,பிராந்திய நோய் தடுப்புவைத்திய அதிகாரி டாக்டர் சி.என்.செனரத் ஆகியோர் தொழு நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கமளித்தனர் .
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் அங்கு உரையாற்றுகையில் வசதிகள் பல இருந்தும் தோல் நோய் நிபுணர் ஒருவர் கல்முனை பிராந்தியத்தில் இல்லாதிருப்பது பெருங்குறையாக உள்ளது . அக்குறை நீக்கப் பட்டால் எமது இந்த நோய் தொடர்பான வேலை திட்டங்கள் மேலும் அதிகரிக்கப் படும்  .
கருத்துரையிடுக

 
Top