நேற்று கல்வியமைச்சில் அமைச்சர் றவுப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் றிசாத்பதியுத்தீன் இணைந்து மலையக மற்றும தென் பிரதேசத்தில் 11 மாவட்ட தமிழ் மொழி மூல பாடாசாலைகளில் முஸ்லீம் ஆசிரியர்கள் நியமன விடயத்தில் ஒன்று பட்டு தமது கோரிக்கை வென்றெடுத்தார்கள்.
இது போன்று ஏனைய விடயங்களிலும் மற்றைய அமைச்சர்களான ஹலீம், கபீர் காசீம் ;ஆகியேர்களையும் இணைத்துக் கொண்டு  ஒன்றுபட்டால் இந்த நாட்டில் உள்ள முஸ்லீம்களது பல விடயங்களில் இந் அரசில் வெற்றி காணலாம்.  என முஸ்லீம் புத்திஜீவிகள் தெரிவிப்பு.
மலையக மற்றும் தென் பிரதேசத்தைச் சேர்ந்த 11 மாவட்டங்களது தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர் நியமனம் செய்வதற்காக கடந்த ஆண்டு முன்னைய ஆட்சியாளர்களினால் வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.  இதில் சுமார் 700 தமிழ் மொழி மூல இந்து, கிரிஸ்த்துவ பாடாசலைகளில் உள்வாங்கப்பட்டிருந்தன. ஆனால்  இம் மாவட்டங்களில் இருக்கின்ற அதே தமிழ் மொழி மூல முஸ்லீம் பாடசாலைகள் எதுவும் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.
இது தொடர்பாக  கண்டி மவாட்டத்தைப் பிரதிநிதிப்படுத்துகின்ற முஸ்லீம் அமைச்சர்களான ரவுப் ஹக்கீம் மற்றும் அமைச்சர் ஹலீம் ஆகியோர்கள் இருக்கின்ற அதேவேளை கோகாலை மாவட்டத்தைப் பிரதிநிதிப்படுத்துகின்ற முஸ்லீம் அமைச்சரான ஜ.தே.கட்சி செயலாளர் ஹபீர் காசீமும் இருக்கின்றார்கள். இதே போன்று எத்தனையோ முஸ்லீம் மாகாணசபை உறுப்பிணர்களும் இருக்கின்றார்கள்.  ஆனால் இவர்கள் எவரும் தமிழ் மொழி மூல முஸ்லீம்  பாடசாலைகளுக்கு செயய்ப்பட்ட இந்த அநியாயத்தை கண்டு கொள்ளாமல் இருந்தது துரதிஸ்ட்டமாகும்.
அன்று இந்த வர்த்தமாணி அறிவித்தலின்போது ஜ.தே.கட்சி எதிர்;க்கட்சி இருந்தபோதிலும் ஆகக்குறைந்தது தங்களது மாவட்டங்கள் பாதிக்கப்படுகின்றபோது இம் முஸ்லீம் உறுப்பிணர்கள்  பாராளுமன்றத்திலாவது குரல் கொடுக்க முடியாதவர்களாகவும்  வட கிழக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லீம்கள் வாக்களித்தும்  குரல் இல்லாமல் இருக்கின்ற அவல நிலைக்கு ஒரு சிறந்ததொரு உதாரணமாகும்.
அதே நேரம் கடந்த ஆட்சியின்போது வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டபோதும் இந்த ஆட்சியில் தான் இதற்கான நியமனங்கள் வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. இந் நிலையில் தங்களது ஆட்சியிலாவது இந் தவறை திருத்துவதற்கு இந்த அமைச்சர்கள் முயற்சிக்காது இன்னும் கவலைக்குரியதாகும்.
இந்நிலைமையில் மலையக முஸ்லீம் கவுன்சில் இந்த விடயத்தை முஸ்லீம் அரசியல் வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதில் இறங்கியது. அதன் விளைவாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ. ஹமீட்  பிரதமரைச் சந்தித்து இது தொடர்பாக  பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டபோதும் திடிரென பிரதமர் ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டி இருந்தால்  பிரதமரின் பணிப்பின் பேரில் ஜ.தே.கட்சியின் தவிசாளர் மலிக்சமரவிக்கிரமவுடன் இது தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
அதன் முடிபில் கல்வியமைச்சின் ஊடாக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதெனவும் இவ்விடயம் சம்பந்தமாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்துடன் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்வது எனவும் என தீர்மாணிக்கப்பட்டடிருந்தது. இதன் பிரகாரம் நேற்று(21) கல்வியமைச்சில் கல்வியமைச்சருடன் இச் சந்திப்பு இடம்பெற்றது.
இச் சந்திப்பில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அ.இ.ம.காங்கிரஸ் தலைவரும் அமைச்சர் றிசாத் பதியுத்தீன் பிரதியமைச்சர் எம்.எஸ் தௌபீக், அ.இ.ம.காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட், மற்றும் ;மலையக முஸ்லீம் கவுன்சிலின் தலைவர் முசம்மில் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் முஸ்லீம்களுக்கு அநியாயம் நடைபெற்றிருப்பதை கல்வியமைச்சர் ஏற்றுக்கொண்டார். உடனடியாக இந்த 11 மாவட்டங்களில் இருக்கின்ற முஸ்லீம் பாடசாலைகளில ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பான தகவல்களையும் சேகரிக்கும் படியும் உரிய அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்குமாறும், கல்வியமைச்சின் செயலாளருக்கு கல்வியமைச்சர் அதே இடத்தில் பணிப்புரை வழங்கினார்கள்.
‘ஓன்றுபட்டால் உண்டு வாழ்வோம்.’ என்பதுக்கு ஒப்ப அமைச்சர் ரவுப் ஹக்கிமும் அமைச்சர் றிசாத்பதியுத்தீனும் 11 மாவட்டங்களது முஸ்லீகளுக்கு எதிராக நடைபெற்ற அநீதியை தட்டிக் கேட்க ஒன்று சேர்ந்தது அநீதிக்கான தீர்வை பெருவதற்கு உந்து சக்தியாக இருந்ததை அதற்காக ஒன்றுபட்டதைக் அக் கூட்டத்தில் கலந்து கொண்ட சில பிரமுகவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இவ்வாறான சமுக விடயங்களில் கட்சி வேறுபாடுகளுக்கப்பால் ஏனைய முஸ்லீம் அமைச்சர்களும் இவர்களுடன் இனைந்து செயற்பட முடியுமானால்  சமுதாயத்தின்  பல பிரச்சினைகளை இலகுவாகத்  தீர்க்கலாம்.
ஆகக்குறைந்தது இந்த மலையக முஸ்லீம் ஆசிரியர்களது நியாயமனத்தில் ஏனைய அமைச்சர்களான ஹலீம், ஹபீர் காசீம் இவர்களுடன் இனைந்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த முன் வந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

கருத்துரையிடுக

 
Top