மட்டக்களப்பு வெல்லாவெளி, காந்திபுரம் பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர். வாழைக்காலையாறில் இருந்து களுவாஞ்சிகுடி நோக்கி பயணம் செய்த பஸ்சின் சக்கரம் கழன்றதில் வீதியைவிட்டு விலகி மதகு ஒன்றுக்கு அருகாக பஸ் தடம்புரண்டது. காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் மேலதிக சிகிச்சைக்களிற்காக மட்டக்ளப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு மண்டூர் பொலிஸார்  சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

 
Top