யு.எம்.இஸ்ஹாக் 

அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக இலங்கை வங்கியின் பிரதி முகாமையாளராக கடமையாற்றி இடமாற்றலாகி  செல்லும் ஜே.ஜி. பிரியந்த குமாரவுக்கு  கல்முனை இலங்கை வங்கி  கிளையில்  நேற்று இரவு பிரியாவிடை வைபவம் இடம் பெற்றது.

கல்முனை வங்கி கிளையின் முகாமையாளர் எம்.எல்.ஏ.ஸாக்கீர் தலைமையில்  நடை பெற்ற  வைபவத்தில்  இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண  பிராந்திய உதவி முகாமையாளர் ஆனந்த நடேசன்  பிரதம அதிதியாகவும்  கௌரவ அதிதிகளாக  கிழக்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர்  ஸ்ரீ பண்டா , அம்பாறை மாவட்ட புதிய பிரதி முகாமையாளர்  அத்தன கொல்ல  ஆகியோரும் கலந்து கொண்டனர் .

அம்பாறை ,சம்மாந்துறை ,பொத்துவில்,ஹிங்குரான ,அக்கரைப்பற்று நிந்தவூர் இலங்கை வங்கி  கிளையின் முகாமையாளர்களும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இடமாற்றலாகி  செல்லும் ஜே.ஜி. பிரியந்த குமாரவுக்கு  கல்முனை வங்கி முகாமையாளர் எம்.எல்.ஏ.ஸாக்கீர்  வாழ்த்துப்பா வாசித்து வழங்கி வைத்ததுடன் , பொன்னாடை மற்றும் நினைவு சின்னம் ,பொற்கிழி என்பனவும் வழங்கி வைக்கப் பட்டது டன்  இசை நிகழ்ச்சியும் இடம் பெற்றன .


கருத்துரையிடுக

 
Top