கல்முனை மண்ணை வான்புகழ் எய்தச்செய்த மூத்த கல்விமான் எஸ்.எச் .எம்.ஜெமீலின் மறைவு  முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார் .

எஸ்.எச்.எம்.ஜெமீலின் மறைவையிட்டு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ..

தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில் ,

சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்விமான் மர்ஹூம் எஸ்.எச்.எம்.ஜெமீல் கல்முனை ஸாஹிராவின் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதயில் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்  அத்தோடு கல்லூரியின் தேசிய வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் இவரும் ஒருவராவார் .

கல்முனை பாத்திமாக் கல்லூரி , கொழும்பு சாஹிராக் கல்லூரி  ஆகியவற்றின் பழைய மாணவராவார்

ஆங்கில மொழி மூலம் கல்விகற்ற எஸ்.எச்.எம். ஜெமீல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில பொருளியல் சிறப்புப்பட்டம் பெற்றார்  பின்னர்  கொழும்பு பல்கலைககழகத்தில் முதுமானிப்பட்டம் பெற்றார்

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளர் , முஸ்லிம் சமய கலாச்சார இராஜங்க அமைச்சின் செயலாளர்   கல்வி கலாச்சார அமைச்சின் மேலதிகச் செயலாளர்  என பல்வேறு உயர்  பதவிகளை மர்ஹூம் எஸ்.எச்.எம் ஜெமீல் வகித்திருந்தார் 

இதற்கு மேலாக எழுத்துத்துறையிலும் பிரகாசித்து 27க்கு மேற்பட்ட நூல்களையும் அன்னார்  எழுதி வெளியிட்டுள்ளார் .

முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக தனது வாழ் நாட்களை அh;ப்பணித்த மா;ஹூம் எஸ்.எம்.எம்.ஜெமீலைப் போன்று எம்சமூகத்தில் வளா;ந்து வரும் கல்விமான்களும் பணியாற்ற முன்வர வேண்டும.; அத்தோடு எம் இளைஞர்களும் இவரை தனது வாழ்வில் றோல்  மொடலாக (உதாரண புருஷராக) பின்பற்றி கல்வியில் முன்னேற வேண்டும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபத் தலைவர்  மர்ஹூம் எம்.எச் .எம்.அஷ்ரஃப்போடு இணைந்து எம்சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த கல்விமான் இவராவார்

மர்ஹூம் எஸ்.எச் .எம்.ஜெமீல் எம்சமூகத்தின் கல்விற்கு ஒளியூட்டியது போல் அன்னாரின் கப்ர் ஒளி பெற வேண்டும். அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கின்றேன். அன்னாரின் மறைவால்  துயருற்றிருக்கும்  அவரின் குடும்பத்தாருக்கும் உற்றார் , உறவினர்கள் ,நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனவு ம் தெரிவித்துள்ளார் 

கருத்துரையிடுக

 
Top