( எஸ்.எம்.எம்.றம்ஸான்)
ஆறாவது தேசிய ரீதியியலான தகவல் தொழில்நுட்ப போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வெற்றிபெற்று சாதனை
படைத்துள்ளனர்.
கல்வியமைச்சின் தகவல் தொழில்நுட்ப பிரிவு , ஸ்ரீலங்கா கணணி சம்மேளனம் , இலங்கை தகவல் தொழில்நுட்ப சம்மேளனம் ஆகியன கொழும்பு பல்கலைக்கழக கணணிப்பிரிவுடன் இணைந்து அகில இலங்கை ரீதியில் நடாத்திய தகவல் தொழில்நுட்பப்போட்டியில் தேசிய ரீதியில் வெற்றிபெற்ற கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் க.பொ.த.உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் கே.எம்.எம்.அஸாம் ஹுசைன் , எம்.ஜே.எம்.முதாஸிர் , எம்.ஜே.றிகாஸ் ஆகிய மூன்று மாணவர்களும் தேசிய ரீதியிலான விருதினை பெறுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
21.4.2015 மாலை 2.00 மணிக்கு இசுறுபாய பத்தரமுல்லையிலுள்ள கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் கல்வியமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெறும் நிகழ்வின் போது இவர்களுக்கான விருது வழங்கப்படவுள்ளதாக கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தெரிவித்தார்.
இம்மாணவர்களோடு அவர்களது பெற்றோர் , கல்லூரி அதிபர் , மாணவர்களுக்கு பொறுப்பான ஆசிரியர் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஸ்ரீலங்கா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ( SLIIT) தேசியரீதியில் மாலபே கெம்பஸில் ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கைபாடசாலைகளுக்கிடையிலான தகவல் தொழில்நுட்பப்  போட்டியில் இக்கல்லூரி மாணவர்கள் மூன்று விருதுகள் பெற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கருத்துரையிடுக

 
Top