ஏ.பி.எம்.அஸ்ஹர்


அம்பாரை மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்கள்  மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு இது வரை மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாததைக்கண்டித்து இன்று மாவட்டம் தழுவிய ரீதியில் அடையாள எதிர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டது.
 இதில் ஓர் அங்கமாக கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும்   கிராம உத்தியோகத்தர்கள்  மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களும் இது வரை தமக்கு  மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாததைக்கண்டித்து பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று நன்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கருத்துரையிடுக

 
Top