சிகிரியா குகை ஓவியத்தில் தனது பெயரை எழுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட யுவதியான உதயசிறிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
 சுற்றுலா சென்ற சமயம் சிகிரியா குகை ஓவியத்தல் தனது பெயரை எழுதியமைக்காக ஏழை யுவதியான உதயசிறிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்த யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அமைப்புக்கள் என்பன ஜனாதிபதிக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
 இந்த நிலையில் இவருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு நேற்று புதன்கிழமை இரவு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டார்


கருத்துரையிடுக

 
Top