சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகத்திற்கும் அநுராதபுரம் ஸஹிரியன் விளையாட்டுக் கழகத்திற்குமிடையே சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.

இப்போட்டியில் கல்முனை சனிமௌண்ட் விளையாட்டுக் கழகம் 6-0 என்ற அடிப்படையில் கோள்களை அடித்து வெற்றி பெற்றது.

இப்போட்டி நிகழ்வுகள் கல்முனை சனிமௌண்ட் விளையாட்டு கழக செயலாளர் ஏ.எம்.ஏ.மனாப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில் முன்னாள் அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஏ.நபார், விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றசீன், கல்முனை சனிமௌண்ட் விளையாட்டு கழகத் தலைவர் அல்-ஹாஜ் யூ.எல்.எம்.கரீம், தவிசாளர் எம்.ஹனீபர், அநுராதபுரம் ஸஹிரியன் விளையாட்டுக் கழகத் தலைவர் ஏ.காதர், பயிற்றுவிற்பாளர் இஸட்.எம்.இஸ்சத் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

 
Top