பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் எஸ்.ரி.ஏ சொலிடரிட்டி பவுண்டேசனால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆறுமாதகால தையல் மற்றும் நான்கு மாதகால உணவு தயாரிப்பு தொடர்பான பயிற்சிகளை இனிதே நிறைவு செய்த பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நிறுவன வடகிழக்கு திட்ட இணைப்பாளர் திரு.வே.வாமதேவன் தலைமையில் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரு.வி.ஜெகதீசன், அவர்களும், சிறப்பு அதிதியாக சுவிஸ் எஸ்.ரி.ஏ நிறைவேற்று பணிப்பாளர் திரு. ஆதிரையன் விஸ் , சுவிஸ் லூசியிங் அழகியல் கற்கைகள் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிறிஸ்டி மோசன்,சுவிஸ் இசை ஒன்றிய தலைவர் மரியான் டோரன், திருமதி அமன்டா, புனித ஆரோக்கியமாத வணக்கத்திற்குரிய அருட்தந்தை வி அம்ரோஸ், அருட்சகோதரி கேட்ருத் , சிறுவர் நன்னடத்தை பொறுப்பதிகாரி திரு. வி.திவ்யமூர்த்தி, முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வை.உஜந்தன், எஸ்.ரி.ஏ சொலிடரிட்டி நிறுவன தலைவர் திரு.வி கமலதாஸ், வை.எம், சி.ஏ தலைவர் திரு. எ சந்திரசேகரன்  திட்ட ஆலோசகர் ஜீ.ரஞ்சித்குமார், அம்மன் இல்ல முகாமையாளர் திருமதி தி.கோகிலா, தையல் பயிற்சி பயிற்றுவிப்பாளர் செல்வி  கே.பரமேஸ்வரி, உணவுக்கலை பயிற்றுவிப்பாளர் எஸ். ஜெசுபாணி, பயிற்சியாளர்கள்  மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். 

இதன்போது தையல் பயிற்சியை நிறைவு செய்த 33 பேருக்கும், உணவுக்களை பயிற்சியை நிறைவு செய்த 25 பேருக்கும் சான்றிதழ்கள்  வழங்கி   வைக்கப்பட்டது, அத்துடன் தையல் மற்றும் உணவுக் கலை பயிற்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்டகள் கண்காட்சிக்கு   வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   


கருத்துரையிடுக

 
Top