யு.எம்.இஸ்ஹாக் -கல்முனை 
இன்று கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்  செய்து வைத்திய சாலையில் புதிதாக நிரமாணிக்கப் பட்ட அவசர சிகிச்சைப் பிரிவையும் , புனர் நிர்மாணம் செய்யப்பட்ட வெளி நோயாளர் பிரிவையும்  திறந்து வைத்தார்.
100 வருடம் பழமை வாய்ந்த இவ்வைத்திய சாலையில் இருந்த பழமை வாய்ந்த  வெளி நோயாளர்  பிரிவு  கட்டிடம்  உடைத்து திருத்தம்  செய்யப் பட்டு 03 கோடி ரூபா செலவில் நவீனமாக அமைக்கப் பட்டுள்ளதுடன், 05 கோடி ரூபா செலவில் புதிதாக அவசர சிகிச்சைப் பிரிவும் நிர்மாணிக்கப் பட்டு இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. 
வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடை பெற்ற  இவ்வைபவத்தில் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன  பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்  முன்னாள் சிரேஸ்ட அமைச்சர் பீ.தயாரத்ன உட்பட அமைச்சு அதிகாரிகள் அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட  பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ராஜித சேனாரட்ண அங்கு உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்பதை நாம் வலியுறுத்தினோம். அதனை பலர் எதிர்த்தனர் இன்று இங்கும் சிங்களத்தில் தேசிய கீதம் பாடப் பட்டது இதி பலருக்கு புரியாமல் இருந்திருக்கும் இன்னுமொரு தடவை இங்கு நான் வரும் பொது தமிழிலும் தேசிய கீதம் பாடப் பட வேண்டும் . சிங்களத்தைப் போன்று தமிழும் தேசிய கீதத்துக்கு இனிமையான மொழிதான் 

  நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இரண்டாம் தரப் பிரஜைகளாக மதிக்கப்பட் நீங்கள் இன்று தலை நிமிர்ந்து வாழ முடிகின்றது. எங்களில் எவரும் இரண்டாம் தர பிரஜைகள் இல்லை அனைவரும் இந்த இலங்கை பிரஜைகளே என்றார்.  

மூன்று தசாப்த காலமாக  வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுகாதார துறையில் பாரிய பின்னடைவுகள் ஏற்பாட்டிருந்தன .  இந்த நிலை இன்று மாற்றப்பட்டு மாகாண  வைத்க்ஹிய சாலைகளுக்கு கூடுதலான நிதி ஒதுக்கப் பட்டுள்ளது 

வடக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு 262 மில்லியன் ரூபா ஒதுக்கப் பட்டுள்ளது அந்த நிதியும் போதாத  நிலை காணப் பட்டால் அதற்கான கோரிக்கைகள் முன் வைக்கப் பட்டால் ஒரு சுற்று நிருபத்தின் மூலம் அந்த தேவையையும் நிறைவு செய்ய முடியும் என்றார் 

கருத்துரையிடுக

 
Top