கிழக்கு மாகாணத்தில் வர்த்தக கேந்திர நிலையமாக திகழும் கல்முனை மாநகரில் தமிழ் சிங்கள புத்தாண்டு வியாபாரம் களைகட்டியுள்ளது. நாளை மறுதினம் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் சைவ மக்கள் புத்தாடை, பொருட்கள் கொள்வனவில் மிகுந்த ஆர்வங் காட்டி வருகின்றனர்.
கல்முனை நகர்ப் புறம் மக்கள் நிறைந்து காணப் படுகின்றனர். நாட்டில் நிலவும் நல்லாட்சியில் போக்குவரத்து சீராகவும் , பொருட்களின் விலை மலிவாகவும் காணப்படுவதால் மக்கள் பொருட் கொள்வனவில் ஆர்வங் காட்டுவதை அவதானிக்க முடிகின்றது.
இதே வேளை யாழ்ப்பாணம் ,திருகோணமலை, கதுறுவெல போன்ற தூர இடங்கள் உட்பட அக்கரைப்பற்று , மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பிரதேசங்களுக்கு புத்தாண்டைக் கொண்டாடும் மக்களின் வசதி கருதி அரச,தனியார் போக்குவரத்து வசதிகளும் விரிவு  படுத்தப் பட்டுள்ளன. போக்குவரத்து வசதிகள் சீராக உள்ளதால் கல்முனைப் பிரதேசத்துக்கு அம்பாறை பிரதேச சிங்கள மக்களும் புத்தாடை மற்றும் பொருட் கொள்வனவுக்காக வருவதை காண முடிகின்றது.கருத்துரையிடுக

 
Top