வைத்திய கலாநிதி எம்.ஏ.எம்.பாஸியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு!
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் பழைய மாணவரும், கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ள கல்முனை உவெஸ்லியன் வைத்திய கலாநிதி எம்.ஏ.எம்.பாஸியை கல்முனை உவெஸ்லியன் 78/82 பழைய மாணவர்கள் அமைப்பினரால் கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வு திருகோணமலை சர்வோதயம் மண்டபத்தில் அமைப்பின் தலைவரும், சர்வோதயத்தின் மாகாணங்களுக்கான இணைப்பாளருமாகிய எஸ்.ஜீவராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், உபதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை, எஸ்.இராஜேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டதுடன், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் 78/82 பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகளால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டதுடன், மாகாண சபை உறுப்பினர் எஸ்.இராஜேஸ்வரனால் கால்நடை திணைக்கள பணிப்பாளரை கௌரவித்து வாழ்த்து மடல் வழங்கப்பட்டதுடன், விவசாய அமைச்சரும், பணிப்பாளரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

 
Top