யு.எம்.இஸ்ஹாக் 
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கல்முனை  பாண்டிருப்பு விஸ்வ பிரம்மகுல  இந்து இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு  ஊர்வலமும், இரத்த தான முகாமும் இரண்டு தினங்களாக  பாண்டிருப்பில் நடை பெற்றது.
பாண்டிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ அரசடி அம்மன், ஸ்ரீ வட பத்திர காளி அம்மன்  ஆலயங்களின் இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு  ஊர்வலமும், இரத்த தான முகாமும் ஆலயங்களின் தலைவர் எஸ்.சசேந்திரன் தலைமையில்  வெள்ளி மற்றும்  சனிக்கிழமை தினங்களில்  இடம் பெற்றது. 
வெள்ளிக்கிழமை  காலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான டெங்கு ஒழிப்பு விழிப்பு ஊர்வலம்  பாண்டிருப்பு கிராமம் முழுவதுமாக இடம் பெற்று விழிப்பூட்டல் துண்டுப் பிரசுரங்களும் வினியோகிக்கப் பட்டு  சனிக்கிழமை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் அனுசரணையுடன் வைத்திய சாலை இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ் தலைமையில் இரத்த தான முகாம் இடம் பெற்றது.
பாண்டிருப்பைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆண்,பெண்கள் இருபாலாரும்  இரத்த தானம் செய்தனர்.
கருத்துரையிடுக

 
Top