புதிய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் "போதைவஸ்து அற்ற இளைஞர்  சமூகம்" என்ற தொனிப்பொருளில் கல்முனை பொலிஸ் நிலையத்தால் எதிர்வரும் ஏப்ரல் 24, 25, 26ம் திகதிகளில் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் நடாத்தப்படவுள்ள, தெரிவுசெய்யப்பட்ட அணிகளுக்கிடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவிபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு கல்முனை பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளிவ்.ஏ. கப்பார் தலைமையில், சாய்ந்தமருது அஸ்லம் பிக்மார்ட் ரெஸ்டூரண்ட் இல் 

இடம்பெற்றது  அஸ்லம் பிக்மார்ட் ரெஸ்டூரண்ட் உரிமையாளர் ஏ.ஆர்.அஸ்லம் ரியாஜ் ,  பொலிஸ் பரிசோதகர் வாஹிட் ஒய்வு பெற்ற விளையாட்டு அதிகாரி எம்.ஐ.எம்.முஸ்தபாஆகியோரும் கலந்து கொண்டனர்
கல்முனை பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளிவ்.ஏ. கப்பார் உரையாற்றுகையில் இன்றைய இளைஞர்கள் மத்தியில் போதை வஸ்த்துப்பாவனைஅதிகரித்துள்ளது.இதனைக்கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தன் கீழ் விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவனையற்ற இளைஞர் சமூகத்தைஉருவாக்கும் செயற் திட்டம் முன்னெடுக்கப்டவுள்ளது என ஹப்பார் தெரிவித்தார்.


அவர் மேலும் உரையாற்றுகையில் :- கல்விகற்கவேண்டிய  இளைஞர் சமூகம் இன்று போவஸ்த்துப்  பாவனைக்கு அடிமையாகி சமூகச் சீரகேட்டுக்குள் சிக்கி பல் வேறு இன்னல்களுக்குள்ளகி கஷ்டப்படுகின்றனர் இவ்வாறான  இளைஞர் சமூகத்திற்கு மறுவாழ்வளிக்கவே விளையாட்டின் ஊடாக போதை வஸ்துப் பாவனையற்ற இளைஞர் சமூகத்தைஉருவாக்கும்திட்டம் முன்னெடுக்படவுள்ளது.
இத்திட்டத்தின் அடுத்தகட்டமாக சமயத்தலங்கள் ஊடாகவும் இளைஞர்கள் மத்தியிலான போதைவஸ்த்து பாவனையை கட்டுப்படுத்துவதற்கான வேலைதிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 
அவர் மேலும் விளக்கமளிக்கையில் இம்மாதம் 24ம்,25ம்,26ம் திகதிகளில் கல்முனைசந்தாங்கேணிவிளையாட்டுமைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன இச்சுற்றுப் போட்டியில் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட 14 கழகங்கள் பங்குபற்றுகின்றன.
1ம் இடத்தைப்பெறும் அணிக்கு15.000 ரூபாபணப்பரிசும்,கிண்ணமும் , 2ம் இடத்தைப் பெறும் அணிக்கு 10.000 பணப்பரிசும் கிண்ணமும் வழங்கப்படுவதுடன் சிறந்தஆட்டக்காரர்களுக்கானவிருதுகளும்,பரிசுப் பொருட்களும் வழங்கப்படவு ள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 26ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியிலும்.பரிசளிப்பு நிகழ்விலும் பிரதமஅதிதியாக கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்  மாஅதிபர் நந்தனமுனசிங்க கலந்து கொள்ளவுள்ளதாகவும் கல்முனைபொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபள்யூ.ஏ.ஹப்பார் தெரிவித்தார். 




கருத்துரையிடுக

 
Top