கல்முனைக்குடி 13ஆம் பிரிவு  புதிய வீதியையும் (New Road)  பாளிகா வீதியையும் இணைக்கும் பாளிகா லேனை ( Balika Lane) புனரமைத்துத் தருமாறு கல்முனை அபிவிருத்தி போரம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி  எச். எம்.எம்.ஹரீஸிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

இவ்வீதியால் நாளாந்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவ மாணவிகளும் பொது மக்களும் போக்குவரத்துச்செய்கின்றனர் மிக நீண்ட காலமாக  மிகவும் மோசமாக வுள்ள இவ்வீதியால் இவர்கள் மிகுந்த கஷ்டங்களை எதிர் நோக்கியுள்ளனர்  குறிப்பாக மழை காலங்களில் போக்குவரத்துச் செய்ய முடியாதுள்ளதுடன் பாடசாலை மாணவிகள் அன்றாடம்  மிகுந்த சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
தற்போது பிரதேச செயலகத்தினால் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்திற்காக முன் மொழிவுகள் இனங்காணப்பட்டு வருகின்றன. 
எனவே கல்முனைக்குடி 14 ஆம் பிரிவுக்கான முன் மொழிவாக இவ்வீதியை முக்கியப்படுத்தி இத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய உரிய நடவடிக்ககை எடுக்க  வேண்டும் என கல்முனை  அபிவிருத்தி போரத்தின் தலைவர் அஷ்ஷெய்கு ஏ.பி.எம்.அஸ்ஹர்  திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். எம்.எம்.ஹரீஸிடம் .வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

 
Top