(பி.எம்.எம்.ஏ.காதர்)
அண்மையில் வெளியான க.பொ.தசாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் “ஏ”பெற்றபெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலய மாணவி உவைஸ் சஜானாவைப்  பாராட்டிய நிகழ்வு நேற்று(09-04-2015) வித்தியலய மண்டபத்தில் அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லா தலைமையில்  நடைபெற்றது. இதில் ஆசிரியர் எஸ்.எம்.அபூபக்கர்(நஜீம்)ஸ்ரீ லங்கா  தவ்ஹீத் ஜமாத்தின் மருதமுனைக் கிளையின்  தலைவர் ஏ.ஆர்.எம்.இக்பால்,உறுப்பினர்களான எம்.எச்.ஏ.அஜ்மீர்,.பி.எம்.நபீர் ஆகியோர் பண அன்பளிப்புக்களை வழங்கி கௌரவித்தனர்.இந்தநிகழ்வில் ஆசிரியர்களும்,மாணவர்களும் கலந்துகொண்டனர்.மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
கருத்துரையிடுக

 
Top